நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது 4ஜி சேவையை வழங்க நிறுவனம் தயாராகி வருகிறது. பிஎஸ்என்எல் 200 தளங்களில் 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் மூன்று மாதங்களுக்கு சோதனை நடத்தப்படும் என்றும், எல்லாம் சரியாக நடந்தால் சராசரியாக ஒரு நாளைக்கு 200 தளங்கள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: எதில் தெரியுமா?
என்னதான் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்கினாலும், அது ஏர்டெல் மற்றும் ஜியோ நெர்வோர்க்குகளை விட பின்தங்கியே உள்ளது. ஏனென்றால் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க்குகள் 4ஜி சேவையை விரிவுபடுத்தி தற்போது 5ஜி சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டது, ஆனால் பிஎஸ்என்எல் இப்போது தான் 4ஜி சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நவம்பர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்றும், அதன்பின்னர் படிப்படியாக 4ஜி நெட்வொர்க் 5ஜிக்கு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், பிஎஸ்என்எல் பயன்படுத்தப்படும் வேகத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மூன்று மாத சோதனைக்குப் பிறகு, நாங்கள் ஒரு நாளைக்கு 200 தளங்களில் வேலை செய்வோம். அதன் பின்னர் மிக விரைவில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், மிகச் சிறிய மென்பொருள் மாற்றங்களுடன், அது 5G ஆக மாறும். இன்று ஒவ்வொரு நிமிடமும் 5ஜி தளம் ஆக்டிவேட் செய்யப்படுவதை பார்த்து உலகமே ஆச்சரியப்பட்டு வருகின்றது. சார்தாமில் 2,00,000வது தளம் அமைக்கப்பட்டுள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார், இந்த சேவை தொடங்கப்பட்ட 5 மாதங்களுக்குள் முதல் 1 லட்சம் 5ஜி தளங்கள் இயக்கப்பட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்த வரை, இந்த இரண்டு நிறுவனங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட முன்னணியில் உள்ளது. இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரும்பாலான இடங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மட்டுமின்றி பல பிராட்பேண்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில், எந்த நெட்வொர்க்கிலும் 24 மணிநேரத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இணைய வேகம் 100Mbps வேகத்தில் வரம்பற்று கிடைக்கும். திட்டத்தில் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில், டேட்டா முடிந்த பிறகும், 5Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். Hotstar Super, Lions Gate, Shemaroo, Hungama, SonyLIV, Zee5, Voot மற்றும் YuppTV ஆகியவற்றின் இலவச சந்தா பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
மேலும் படிக்க | Chat GPT: AI செயலிகள் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள்..! மக்களே உஷார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ