பிப்ரவரி 9 முதல் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனை ஆரம்பம்!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஹோம்பாட், ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்திருந்தது.  இந்த ஸ்பீக்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில் தற்போது விற்பனை இந்த ஆண்டின் துவக்கத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. 

Last Updated : Jan 24, 2018, 01:56 PM IST
பிப்ரவரி 9 முதல் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனை ஆரம்பம்! title=

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஹோம்பாட், ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்திருந்தது.  இந்த ஸ்பீக்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில் தற்போது விற்பனை இந்த ஆண்டின் துவக்கத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. 

முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் அமெரிக்காவில் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனையை துவங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.  அதன்படி பிப்ரவரி 9-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. ஹோம்பாட் வாங்க விரும்புவோர் இதனை ஜனவரி 26 முதல் முன்பதிவு செய்ய முடியும். 

வெள்ளை மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கும் ஆப்பிள் ஹோம்பாட் அமெரிக்கா, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும். 

சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஹோம்பாட் விலை 349 டாலர்கள் (ரூ.22,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனை நடைபெறுகிறது. 

Trending News