EeVe Soul: மின்சார ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. மின்சார வாகன சந்தையில், வாடிக்கையாளர்களுக்காக, ஈவி இந்தியா (EeVe India) ஒரு சிறந்த தேர்வைக் கொண்டு வந்துள்ளது.
பொதுவாக மின்சார ஸ்கூட்டர்களின் (Electric Scooter) வேகம் சற்று குறைவாக இருப்பதால், இதுவரை பலர் இவற்றை வாங்க தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் EeVe India, வாடிக்கையாளர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வளித்துள்ளது.
EeVe India-வின் புதிய மின்சார ஸ்கூட்டரில், நீங்கள் அதிவேகத்தை அனுபவிக்க முடியும். மேலும் சந்தையில் இதுவரை கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களில் இல்லாத பல அம்சங்களை இந்த ஸ்கூட்டரில் நீங்கள் பெறலாம்.
120 கிலோமீட்டருக்கான அட்டகாசமான ரேஞ்சை தருகிறது Eeve Soul மின்சார ஸ்கூட்டர்
Eeve Soul மின்சார ஸ்கூட்டர் 4 முதல் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் பயணிக்கலாம்.
அதே நேரத்தில், இந்த ஸ்கூட்டரில் அதிக வேகத்தையும் அனுபவிக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ ஆகும்.
Eeve Soul மின்சார ஸ்கூட்டரின் விலை என்ன?
EeVe India, தனது புதிய Eeve Soul மின்சார ஸ்கூட்டரின் விலையை ரூ.1,39,900 என நிர்ணயித்துள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் இரண்டு டூயல் டன் நிறங்களில் கிடைக்கும். ஒரு வேரியண்ட் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களின் கவலையாக இருக்கும். மற்றொன்று சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களின் கலவையாக இருக்கும்.
EeVe India-வின் இணை நிறுவனர் ஹர்ஷ்வர்தன் தித்வானியா, நிறுவனம் வரும் காலங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெரும் முதலீடுகளை செய்யும் என்றும் பெரிய சந்தைப் பங்கைப் பெறும் என்று Eeve Soul இன் வெளியீட்டு விழாவில் கூறினார்.
கடந்த ஆண்டில், EeVe இந்தியா சுமார் 10,000 மின்சார ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனை செய்தது.
ஸ்கூட்டரின் டெலிவரி 2022 ஆம் ஆண்டில் தொடங்கும்
EeVe Soul மின்சார ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு முதல் சாலைகளில் காணக்கிடைக்கும். நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் EeVe Soul மின்சார ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கும்.
இந்த மின்சார ஸ்கூட்டரில் சிறப்பான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ரிமோட் மோட் மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.
EeVe Soul மின்சார ஸ்கூட்டர் தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் ஓலா, ஏத்தர் (Ather), பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.
ALSO READ | BMW iX SUV முதல் எலக்ட்ரிக் காரின் விலை இந்தியாவில் 1.15 கோடி ரூபாய்! விவரம் இங்கே...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR