நீங்கள் ஒரு டெக்னாலஜி விரும்பியாக இருக்கலாம். அதிநவீன பொருள்கள் வீடு முழுவதும் நிரம்பியிருக்க நீங்கள் ஆசைப்படலாம். அப்படி இருந்தால், நிச்சயம் உங்கள் வீடுகளில் அமேசான் எக்கோ சாதனங்கள் நிறுவப்பட்டிருக்கும் அல்லது அதை வாங்கியே ஆக வேண்டும் விருப்பத்தில் இருக்கலாம்.
ஒருவேளை அமேசான் அலெக்ஸா எக்கோ சாதனம் உங்கள் வீட்டில் இருந்தால், அதை எங்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் அதை உங்கள் படுக்கையறையில் மட்டும் வைக்கக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏனென்றால், அந்த சாதனங்கள் உங்களின் அனுமதியின்றியே உங்களின் உரையாடல்களை கவனித்து, அதை மற்றொருவருக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என கூறியுற்றினர். Alexa சாதனம் உங்களுக்குப் பிடித்த இசையை இசைப்பது, அலாரங்கள் அமைத்தல், செய்திகள் மற்றும் வானிலை அப்டேட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் செய்ய முடியும் என்றாலும், அந்த சாதனம் உங்கள் கட்டளைகளை கவனிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உங்கள் அனுமதியின்றி எப்போதும் உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அசத்தும் பிஎஸ்என்எல்: வெறும் ரூ.49-ல் சூப்பர் ரீசார்ஜ் பிளான், பயனர்கள் ஹேப்பி!!
இதுகுறித்து பிரபல ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், "அலெக்ஸாவை வாங்கும் ஒவ்வொருவரும் அது உங்களை அடிக்கடி பதிவுசெய்துகொண்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுதான் பயன்படுத்துகிறீர்கள். உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில்தான் அலெக்ஸா வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் தங்களுடைய படுக்கையறைகள் மற்றும் குளியலறை போன்ற இடங்களில் அலெக்ஸா சாதனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அலெக்ஸாவை ஹால் அல்லது சமையலறையில் வைத்திருப்பது நல்லது.
அமேசான் ஊழியர்கள் உங்களின் சில தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்க முடியும். அமேசான் இதை உண்மை என உறுதிப்படுத்தியது. இருப்பினும், எதிர்கால அப்டேட்களுக்கு, மனிதர்களின் பேச்சு குறித்த சாதனத்தின் புரிதலை மேம்படுத்த ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே ஊழியர்கள் உரையாடல்களைக் கேட்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்தது. அமேசானில் உள்ள அலெக்சா ஊழியர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நாளைக்கு 1,000 ஆடியோ கிளிப்களை மதிப்பாய்வு செய்கிறார்கள்
இதுகுறித்து அமேசான் கூறியதாவது,"இந்த மதிப்பாய்வு கருவிகளுக்கான அனுமதி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, சேவை மேம்பாட்டுக்கு மட்டும்தான். எங்கள் மறுஆய்வு செயல்முறை எந்த வாடிக்கையாளர் என அடையாளம் காணக்கூடிய தகவலுடன் குரல் பதிவுகளை இணைக்காது. இதன்மூலம், யார் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.
இருப்பினும், நீங்கள் செட்டிங்ஸை சரிசெய்து பதிவு செய்யும் ஆப்ஷனை முடக்கலாம். உங்கள் மொபைலில் 'அலெக்ஸா' செயலியைத் திறந்து, 'Settings' என்பதற்குச் சென்று, 'Privacy' என்பதைத் தேர்வுசெய்து,'manage your Alexa data என்பதைத் தேர்வு செய்து, 'how long to save recordings' என்பதைத் தேர்ந்தெடுக்கவும், 'don't save recordings' என்பதைத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் 'Confirm' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலும், 'Improve Alexa' உதவுவதற்கு கீழே ஸ்க்ரோல் செய்து, 'use of voice recording' என்பதைத் தேர்ந்தெடுத்து, அதை மாற்றலாம்.
மேலும் படிக்க | ரூ 666 ரீசார்ஜ் பிளான்..ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ