மலிவு விலையில் அனைத்து வசதியும் கூடிய இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போன்

விலையுயர்ந்த போனில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து வசதிகளையும் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2019, 01:54 PM IST
மலிவு விலையில் அனைத்து வசதியும் கூடிய இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போன் title=

புதுடெல்லி: முன்னணி மொபைல் உற்பத்தியாளரான இன்பினிக்ஸ் மொபைல் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஆனா "இன்பினிக்ஸ் ஹாட் 8" ஐ இந்தியாவில் கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட்டில் அடங்கும் மலிவு வகையான மாடல் ஆகும். இந்த போனில் குறைந்த விலையில் நீங்கள் பல நல்ல அம்சங்களைப் பெறுவீர்கள்.

இன்பினிக்ஸ் ஹாட் 8 சிறப்பம்சம் என்ன!!

இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.6,999.

மூன்று ரியர் கேமரா (13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + லோ லைட் சென்சார்)

8 எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, 

6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு

பிக்சல் 1600x720 மன்றும் திரைவிகிதம் 20:9 

கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது

5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,

சாம்பல், நீலம், கருப்பு, ஊதா போன்ற நிறங்களில் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் 9.0 பை.

Trending News