புதுடெல்லி: உலகம் முழுவதும் தனது வலிமையை பறைசாற்றி பெருமை கொள்ளும் சீனா, இந்தியாவின் 'கெளடில்யா'வைப் பார்த்து பிரமிக்கிறது. சீனா ஆக்கிரமித்துள்ள திபெத்தை கடந்து இந்தியாவின் EMISAT என்ற உளவுத்துறை செயற்கைக்கோள் சென்றுள்ளது. இந்த செயற்கைக்கோளில் 'கெளடில்யா' என்ற ELINT அதாவது மின்னணு நுண்ணறிவு அமைப்பு (electronic intelligence system) உள்ளது.
இந்த அமைப்பின் மூலம், விண்வெளியில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரையில் ஒரு மீட்டர் வரை radius வரை நடக்கும் நடவடிக்கைகளை தெளிவாக படம் எடுக்க முடியும்.
EMISAT உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு Defense Research and Development Organization (DRDO) உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோளானது, நுண்ணறிவு உள்ளீட்டைச் சேகரிக்கும் பணிகளைச் செய்கிறது.
பாதுகாப்புத் துறையில் முக்கியமான தகவல்களை சேகரிக்க முடியும் என்பது இந்த செயற்கைக்கோளின் சிறம்பசம்சமாகும். இந்த செயற்கைக்கோளின் ELINT அமைப்பு எதிரியின் பகுதியில் ஊடுருவப் பயன்படுத்தப்படும் ரேடியோ சிக்னல்களையும் கண்டறிந்துவிடும்.
லடாக்கின் Pangong Tso ஏரி தொடர்பாக இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை பேசிய ஒரு நாளுக்குப் பிறகு, இந்த செயற்கைக்கோள் திபெத்தின் அந்தப் பகுதியைக் கடந்து சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது People's Liberation Army (PLA) of China வசம் உள்ளது.
இந்த செயற்கைக்கோள், சீனா தொடர்பான பல முக்கியமான தகவல்களை சேகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.
திபெத்தில் உள்ள ராணுவ கட்டமைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் தற்போது சீனா செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.
Read Also | China boycott: ரக்ஷாபந்தன் பண்டிகையில் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா...
லடாக்கில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் சீனா மற்றும் இந்தியப் படைகள் கடந்த மூன்று மாதங்களாக களத்தில் நிற்பதால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது. லடாக்கின் 4 பகுதிகளில் சீனா ஊடுருவிய நிலையில், இறுதியில் மூன்று பகுதிகளில் இருந்து பின்வாங்க ஒப்புக் கொண்டது. ஆனால் பாங்காங் ஏரி பகுதியில் இருந்து பின்வாங்குவதற்கு சீனா உடன்படவில்லை.
அதற்கு மாறாக, Pangong Tso ஏரி மற்றும் டெப்சாங் பகுதிகளில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதில் சீனா ஈடுபட்டுள்ளது. சின்ஜியாங் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ள சீனா, திபெத் மற்றும் தன்னுடைய 7 விமான தளங்களில் புதிய போர் விமானங்களை நிறுத்தியுள்ளது.
சீனாவின் தீய எண்ணத்தை உணர்ந்துக் கொண்ட இந்தியாவும் தனது பாதுகாப்பு கட்டமைப்பையும், திட்டங்களையும் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாகத் தான் தற்போது இந்தியாவின் கெளடில்யாவின் செயல்பாடுகளால் சீனா செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.
EMISAT என்பது இஸ்ரோவின் மினி சேட்டிலைட் -2 ஆகும். 436 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 2019 ஏப்ரல் முதல் தேதியன்று PSLV-C45 ஆல் sun-synchronous polar orbitஇல் 748 கி.மீ உயரத்தில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் electromagnetic spectrum (மின்காந்த நிறமாலை) அளவீட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.