மீட்புப் பணிகளுக்காக புதிய ட்ரோன் கண்டுபிடிப்பு! மழைவெள்ள மீட்பில் உதவும் புத்தாக்கம்

Indian Rescue Academy : வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க புதிய நீர் ட்ரோன்.. கடுமையான சூழல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதுமையான கண்டுபிடிப்பு...

Last Updated : Aug 1, 2024, 02:12 PM IST
  • வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க புதிய நீர் ட்ரோன்..
  • கடுமையான சூழல்களை தாங்கும் ட்ரோன்
  • சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீர் ட்ரோன்
மீட்புப் பணிகளுக்காக புதிய ட்ரோன் கண்டுபிடிப்பு! மழைவெள்ள மீட்பில் உதவும் புத்தாக்கம் title=

மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எதிர்பாராதவிதமாய் ஏற்படுவது தான் இயற்கை பேரிடர் என்றாலும், அதற்கான தயார்நிலையில் இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில், இந்தியாவில் மழைக்காலத்தில் ஏற்படும் சிக்கல்களின்போது உயிரைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்ட அதிநவீன ITUS வாட்டர் ட்ரோனை இந்திய மீட்பு அகாடமி வெளியிட்டுள்ளது.

தற்போது வயநாட்டில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம், கேதார்நாத்தில் மேகவெடிப்பு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கைப் பேரிடர் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் வெளியாகியிருக்கும் அதி நவீன வாட்டர் ட்ரோன் முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற இதுபோன்ற நவீன கருவிகளின் கண்டுபிடிப்பு அத்தியவசியமானதாகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய பேரிடர் மீட்பு பயிற்சி நிறுவனமான இந்தியன் ரெஸ்க்யூ அகாடமி, ITUS வாட்டர் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கருத்தில் கொண்டு இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரெஸ்க்யூ அகாடமி என்பது 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ITUS ஸ்போர்ட்ஸ் அண்ட் சேஃப்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 

ITUS வாட்டர் ட்ரோன் 

ITUS வாட்டர் ட்ரோன் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது, இது வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இயங்கும்போது தலைகீழாக மாறினாலும் தானாகவே சரி செய்துகொள்ளும் திறன் படைத்த இந்த ITUS வாட்டர் ட்ரோன், சவாலான சூழ்நிலைகளில் நல்ல முறையில் செயல்படுகிறது. உயர் திறன் கொண்ட ஜெட் பம்ப் மூலம் இயக்கப்படும் ITUS வாட்டர் ட்ரோன், சிறந்த சூழ்ச்சி மற்றும் துரிதமான செயல்பாட்டால் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது.

மேலும் படிக்க | மீண்டும் முடங்கியது மைக்ரோசாஃப்ட் சேவைகள்! ஐரோப்பாவை பாதித்த Outage 2.0!!

 

அதிக திறன் கொண்ட ஜெட் பம்பிலிருந்து சக்தியைப் பெறுகிறது. அதன் வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் காரணமாக, இந்த ட்ரோன் மக்களுக்கு தேவைப்படும் நேரங்களில் விரைவாக உதவுகிறது. கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இந்த நீர் ட்ரோனின் பேலோட் திறன் 100 கிலோ வரை இருக்கும், அதாவது 100 கிலோ வரை எடையுள்ள ஒருவரை எளிதாக மீட்க முடியும். இதன் மூலம், வெள்ளம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இது மட்டுமின்றி, இதன் டாப் ஸ்பீடு 20 நாட்ஸ் ஆகும், இதன் காரணமாக இந்த ட்ரோன், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைவாக செலல் முடியும். 

வெள்ளம் ஏற்பட்டிருக்கும் இடத்தில், கடுமையான சூழல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கடல் நிலை 3 என்ற சவாலான நிலைகளில் திறம்பட செயல்படும், 1.25 மீட்டர் வரை எழும் கடல் அலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது.  

கனமழை காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால், இந்த ஆளில்லா விமானம் மீட்புக் குழுக்களின் உயிர்காக்கும் திறனை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | டெலிஃபோட்டோ லென்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் தூள் கிளப்பும் மோட்டோரோலா எட்ஜ் 50

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News