மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குறைந்த மிட்ரேஞ்ச் பிரிவில் வருகிறது. எட்ஜ் 50 ஃப்யூஷனுக்கு மேலே உள்ள இந்த போன், 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரை, பிரத்யேக டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய டிரிபிள் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி கொண்டது.
இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50
மோட்டோரோலா எட்ஜ் 50 தனி 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பகத்தின் விலை ரூ.27,999 என்ற அளவில் இருக்கும். Axis Ban மற்றும் IDFC First Bank கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் அளவில் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மாதத்திற்கு 2,889 இல் தொடங்கி 9 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI விருப்பமும் உண்டு.
ரிலையன்ஸ் ஜியோ ஆஃபர்
ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மோட்டோரோலா எட்ஜ் 50 போன் வாங்கினால், ரூ.10,000 வரை சலுகை கிடைக்கும். ரூ. 2,000 வரையிலான ஜியோ கேஷ்பேக் (ப்ரீபெய்டு - ரூ. 50 x 40 வவுச்சர்கள் செல்லுபடியாகும்) மற்றும் ரூ. 8,000 வரையிலான கூடுதல் சலுகைகள் Swiggy தள்ளுபடி, EaseMyTrip சலுகைகள் என பத்தாயிரம் ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்டான ஸ்மார்ட்போன், வேகன் லெதர் (ஜங்கிள் கிரீன், பான்டோன் பீச் ஃபஸ்) மற்றும் வேகன் சூட் (கோலா கிரே) என இரு வகைகளில் வருகிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட், மோட்டோரோலா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் இந்த ஸ்மார்ட்டான் போனை வாங்கலாம்.
மேலும் படிக்க | நிலைகுலைந்த இந்திய வங்கிகள்! ஜூலை 31 சைபர் தாக்குதல் எதிரொலி! லேட்டஸ்ட் அப்டேட்!
மோட்டோரோலா எட்ஜ் 50 சிறப்பம்சங்கள்
மோட்டோரோலா எட்ஜ் 50, பிரீமியம் எட்ஜ் 50 ப்ரோவின் அதே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் எல்-வடிவ கேமரா லென்ஸ் பிளேஸ்மென்டுடன் வருகிறது. 1.5K+ ரெசல்யூசன் மற்றும் 120Hz உயர் புதுப்பிப்பு வீத ஆதரவுடன், 6.67-இன்ச் pOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது.
100 சதவீதம் DCI P3 வண்ண வரம்பு மற்றும் 1900 nits HDR பீக் பிரகாசம் கொண்ட வளைந்த 10-பிட் பேனல் கொண்ட மோட்டோரோலா எட்ஜ், HDR10+ ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடனான திரையை கொண்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு வழங்கும் விதமாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.
50MP Sony LYTIA 700C பிரதான லென்ஸ், 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 13P அல்ட்ராவைட் லென்ஸ் உடன் டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரதான லென்ஸில் மென்மையான மற்றும் நிலையான வீடியோவிற்கான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு உள்ளது.
மேம்பட்ட புகைப்பட அனுபவத்திற்காக மோட்டோரோலா மோட்டோஏஐ அம்சங்களை இணைத்துள்ளது. முன்பக்கமாக, செல்ஃபிகளை க்ளிக் செய்ய 32எம்பி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் உள்ள கேமரா 30fps வேகத்தில் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட 4m Qualcomm Snapdragon 7 Gen 1 Accelerated Edition சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. 68W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த புதிய போன், ஆண்ட்ராய்டு 14 இல் ஹலோ UI உடன் இயங்குகிறது.
2 வருட OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக திங்க்ஷீல்டு பாதுகாப்பையும் மோட்டோரோலா வழங்குகிறது. இரட்டை சிம், 5G, Wi-Fi 6E, GPS உட்பட GNSS ஆதரவு கொண்ட போன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் ஆகும்
மேலும் படிக்க | மீண்டும் முடங்கியது மைக்ரோசாஃப்ட் சேவைகள்! ஐரோப்பாவை பாதித்த Outage 2.0!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ