சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா செல்களின் படங்கள்!

சூரியனின் மேற்பரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான படங்கள் என்று வானியலாளர்கள் புதன்கிழமை (உள்ளூர் நேரம்) வெளியிட்டனர்.

Last Updated : Jan 30, 2020, 02:12 PM IST
சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா செல்களின் படங்கள்!

சூரியனின் மேற்பரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான படங்கள் என்று வானியலாளர்கள் புதன்கிழமை (உள்ளூர் நேரம்) வெளியிட்டனர்.

சூரியனை ஆய்வு செய்ய டேனியல் கே.இனூய் சூரிய தொலைநோக்கியை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை அமைத்து உள்ளது. இது ஹவாயில் உள்ள ஹலேகலே என்ற எரிமலையில் அமைந்துள்ளது. சூரியனை  முன்னோடியில்லாத வகையில் விரிவாகக் காண தொலைநோக்கி கண்ணாடியைக் கொண்டுள்ளது.

பாப்கார்னின் கொதிக்கும் கார்னை போல சூரியன் தோற்றமளிக்கிறது. டேனியல் கே. இனூய் சூரிய தொலைநோக்கி சூரியனை மிக நெருக்கமாக படம் பிடித்து உள்ளது. இது சூரிய அறிவியலின் புதிய யுகத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய தொலைநோக்கியின் அதிர்ச்சியூட்டும் முதல் படங்கள் சூரியனின் மேற்பரப்பை உருவாக்கும் ரோலிங் பிளாஸ்மாவில் உள்ள வடிவங்களை வெளிப்படுத்துகின்றன.

இந்த புகைப்படம் 789 நானோ மீட்டரில் (என்.எம்) எடுக்கப்பட்டது. இப்படம் முழு சூரியனையும் உள்ளடக்கிய கொதிக்கும் வாயுவின் வடிவத்தைக் காட்டுகிறது. இந்த படம் 22,600 சதுர மைல் (36,500 கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு கட்டுரையில்  நமது மின்னணு அமைப்புகள் மற்றும்  நெட்வொர்க்குகளை சீர்குலைக்கும் அளவுக்கு பெரிய விண்வெளி சூப்பர் புயல்கள் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது என கூறி உள்ளது.

More Stories

Trending News