இஸ்லாத்திற்கு எதிரான PUBG மீதான தடையை 13 நாட்களில் பாகிஸ்தான் நீக்கியது ஏன்?

பாகிஸ்தானின் இம்ரான் கான் 13 நாட்களில் ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு PUBG மீதான தடையை நீக்கியதன் பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது தெரியுமா?

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 31, 2020, 03:14 PM IST
இஸ்லாத்திற்கு எதிரான PUBG மீதான தடையை 13 நாட்களில் பாகிஸ்தான் நீக்கியது ஏன்?
zee media

இஸ்லாமாபாத்: ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு PUBG இஸ்லாம் மதத்திற்கு எதிரனது என்று சொல்லி, விதித்தத் தடையை வெறும் 13 நாட்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நீக்கியுள்ளார்.  

கேமிங் தளத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதாக PUBG இன் நிறுவனமான “Proxima Beta” உறுதியளித்ததை அடுத்து, PUBG இலிருந்து தடையை நீக்க பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் (PTA) வியாழக்கிழமை முடிவு செய்ததாக பாகிஸ்தான் செய்தித்தாள் டான் தெரிவித்துள்ளது.

ஜூலை 17 அன்று பாகிஸ்தான் இந்த விளையாட்டை இஸ்லாமிய எதிர்ப்பு என்று கூறி தடை செய்தது தெரிந்தது பாகிஸ்தான் அரசு. இந்த விளையாட்டு இளைஞர்களை மோசமாக பாதிக்கிறது என்று அரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்டது.

“Proxima Beta” நிறுவனம் தடை செய்யப்பட்ட பிறகு, அது பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொரர்பு கொண்டிருந்தது. கேமிங் தளத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதன் பிரதிநிதிகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தெரிவித்தனர்.

Read Also | குருத்வாராவை மசூதியாக மாற்ற பாகிஸ்தான் சதி... இந்தியா கண்டனம்

அதில் சமாதானமான பாகிஸ்தான் அரசு தடையை நீக்கி உத்தரவிட்டது. PUBG காரணமாக பாகிஸ்தானில் இளைஞர்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்வதாக PUBG தடை செய்யப்பட்ட நேரத்தில் PTA தெரிவித்தது. 

மேலும் இளைஞர்களின்   தற்கொலை மனோபாவம் அதிகரித்திருந்ததாக கூறியதும் குறிப்பிடத்தக்கது. PUBG விளையாட்டு இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு கூறியது. ஆனால் சில நாட்களில், இம்ரான் கான் அரசாங்கம் PUBGக்கான தடையை நீக்கியதன் பின்னணி மர்மமாகவே இருக்கிறது.