தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்து வருகின்றார். மேலும், காதலர் தின வெளியீடாக உலவிரவு என்ற ஆல்பம் ஒன்றிலும் அவர் நடித்து உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் வெளியான இந்த ஆல்பம் பெரும் வரவேற்ப்பு பெற்றது.
இந்த நிலையில், தொகுப்பாளினி நேற்று டிடி என்கிற திவ்யதர்ஷினி ஷாப்பிங் சென்றுள்ளார். இது குறித்து ஒரு புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டிடி. அந்த புகைப்படத்தில் கருப்பு நிற ஆடையில் அவர் முகம் முழுவதையும் மூடி காணப்பட்டார்.
ஷாப்பிங் செய்யும் போது ரசிகர்கள் யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார். ரசிகர்கள் யாரும் தன்னை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக முகத்தை மறைக்கும் படி பர்தா போன்ற உடையணிந்து சென்றுள்ளாராம்.