மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட மத்திய ரயில்வே அமைச்சகம் புளூபிரிண்ட் ஒன்றை தயாரித்துள்ளது. மேலும் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளும் அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தியின் கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் காந்தியை நினைவு கூறும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் நம்மை ஒதுக்குவார்கள், பின்னர் நம்மை பார்த்து நகைப்பார்கள். இதையடுத்து நம்மிடம் சண்டையிடுவார்கள். அதன் பின்னரே நாம் வெற்றியடைவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
Prime Minister Narendra Modi pays tributes to #MahatmaGandhi at Delhi's Rajghat #GandhiJayanti pic.twitter.com/YW7FvjBslE
காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் தினம். இவர் 1869 அன்று அக்டோபர் 2 -ம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார் ஆவார்.
இவரின் அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்றம் அல்லாமால் சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இந்நாள் அனைத்த உலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இவரின் பிறந்தநாளை இந்தியாவின் தேசிய விடுமுறை நாள் அனுசரிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.