ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாக 174 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் காஜூபேட்டையில் செம்மரம் வெட்டச்சென்றதாக 16 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பனையில் லங்கமல்லாவில் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 174 தமிழர்கள் செம்மரம் வெட்டச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு, ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 டன் செம்மரம், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இதனிடையில் எங்களுக்கும் தமிழ் கலாசாரம் மீது பற்று உள்ளது என உறுதியாக நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா, துபாய், அயர்லாந்து, வர்ஜீனியா, மெக்ஸிகோ, சிகாகோ, தென் கொரியா, பாங்காக், ரஷ்யா, மலேசியா, பிலிப்பீன்சு, உக்ரைன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் தீப ஒளி திருநாளான இன்று பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தும், கோவில்களில் தீபம் ஏற்றியும் சுவாமியை வழிப்பட்டனர். வாழ்வில் இருள் நீங்கி வளமான வாழ்வு அமைய வேண்டி உற்றார் உறவினர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.