போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த கால்பந்து வீரர். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.
ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மெஸ்சி 2-வது இடத்தையும், நெய்மர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
போர்த்துகல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து போட்டிகளில், போர்த்துகல் வென்ற முதல் கிண்ணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ தலைமையில், போர்த்துகல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி பெற்றமையினால் ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட, அந்த நாட்டு ஜனாதிபதி மிகுவேல் அலெகுரேக் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மெடிரா விமான நிலையம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விமானநிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸைத் வீழ்த்தி போர்ச்சுகல் சாம்பியன் பட்டம் வென்றது
பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறுதிப்போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். இதில், ரொனால்டோ 25 நிமிடங்கள் கூட ஆட முடியவில்லை. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் காயம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாமல் கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ.
15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. முதலாவது அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.
பிரான்சில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரின் எஃப் பிரிவு அணிகளான போர்ச்சுக்கல் மற்றும் ஐஸ்லாந்து அணி மோதின. இந்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஐஸ்லாந்து அணி முக்கியமான தொடர் ஒன்றில் ஆடுவது இதுவே முதல் முறை. ஆனால் தொடக்கத்தில் கைல்ஃபி சைகுர்ட்சன் கோல் அடிக்க முயன்றார் ஆனால் போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ர்சியோவைத் தாண்ட முடியவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.