ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் 100 பணக்கார தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில், முகேஷ் அம்பானி 88 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு 6,58,400 கோடி ரூபாய் ஆகும்.