உங்கள் திருமண உறவை காப்பாற்ற 80/20 ரூல்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Relationship Tips 80 20 Principle : அனைவருக்குமே தனித் திருமண வாழ்க்கை நன்றாக சொல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த 80/ 20 ரூல்சை பாலோ பண்ண வேண்டும்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 24, 2024, 04:46 PM IST
  • திருமண உறவை காப்பாற்றும் 80/20 ரூல்
  • இதை செய்தால் கண்டிப்பாக சண்டை வராது..
  • என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள் திருமண உறவை காப்பாற்ற 80/20 ரூல்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! title=

Relationship Tips 80 20 Principle : இப்போதைய காலக்கட்டத்தில், ஒரு திருமணத்தை நடத்துவதைவிட, அந்த திருமணம் விவாகரத்து வரை செல்லாமல் காப்பற்றுவதுதான் கடினமான காறியமாக மாறியிருக்கிறது. காரணம், தம்பதிகள் பலருக்கு பெருந்தன்மையும், புரிதலும் குறைந்து போய் விட்டது. அப்படிப்பட்டவர்கள், இந்த 80/20 ரூல்ஸை ஃபாலோ பண்ணா, பிரச்சனையே இருக்காது. 

80/20 என்றால் என்ன?

ஒரு நல்ல உறவுக்கு அர்த்தம், அது 80% ஒருவருக்கு இன்னொருவர் கொடுக்கும் தேவையான காதல், அன்பு, மரியாதை, ஆதரவு ஆகியவை ஆகும். மீதி 20%, உங்கள் பார்ட்னருக்கு தேவைப்படும் விஷயம், அது உங்களிடையே இல்லாததாக இருக்கும். 

இதில், உங்கள் பார்னரிடம் இருக்கும் 80% உங்கள் உறவை கட்டிக்காக்க பெரிய உதவியாக இருக்கும். உணர்வு ரீதியான பாதுகாப்பு, காதல் ஆகியவை இதில் அடங்கும். இதனால், நீங்கள் பர்ஃபெக்ட் ஆன ஆள் இல்லை என்பது உங்கள் பார்ட்னருக்கு தெரிந்தாலும், அவரது குறைகளும் உங்களுக்கும், உங்கள் குறைகள் அவருக்கும் பிடிக்க ஆரம்பிக்கும். இதுதான் அந்த மீதி 20%. இந்த 80/20 ரூல்ஸை 5 வழிகளில் ஃபாலோ செய்தால், கண்டிப்பாக உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். 

நேரம் செலவழித்தல்:

அதிக நேரத்தை ஒன்றாக செலவிடுவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் செலவிடும் நேரத்தை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக மாற்றலாம். இதயம் உவந்து உரையாடுவது, ஒரு டேட்டிங் செல்வது, பிடித்த விஷயங்களை ஒன்றாக செல்வது ஆகியவற்றை செய்யலாம். இப்படி, அர்த்தமுள்ள சில மணி நேரங்களை செலவிட்டால், அது எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும். 

பேசுவது:

மனதில் இருப்பதை பேசிக்கொள்வது, அந்த உறவை வலுவாக்க உதவும். சிறிய பிரச்சனைகளை கூட, பேசாமல் விட்டுவிட்டால் பெரிதாக மாறிவிடும். மனம் விட்டு பேசிவிட்டல், மனதில் என்ன குறை அல்லது பாரம் இருந்தாலும் தீர்ந்து போய்விடும். இதனால், உங்கள் பார்டனரின் உணர்வுகளுக்கு நீங்கள் பதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். 

மேலும் படிக்க | ஆண்கள் vs பெண்கள்: இருவரில் நன்றாக தூங்குவது யார்? ரிப்போர்ட்!

உறவின் ஆழம்:

வலுவான உறவுகள், நம்பிக்கை, மரியதை மற்றும் பகிரப்பட்ட இலக்குகள் ஆகியவை ஒரு உறவை பன்மடங்காக உயர்த்தி விடும். எனவே, உங்கள் உறவில் சின்னச்சின்ன உறவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் உங்கள் உறவை தக்க வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை பாராட்டுவது, அவர்கள் உங்கள் உறவுக்கு கொடுத்த முன்னுரிமை ஆகியவற்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

சண்டைக்கு தீர்வு:

உறவில் வரும் சின்ன சின்ன சண்டைகளை நினைத்து பெரிதாக யோசிக்க வேண்டாம். அதை தவிர்த்து, பெரிய பிரச்சனையாக உருவெடுக்க காத்திருக்கும் அல்லது ஏற்கனவே உருவெடுத்த விஷயங்களை கணக்கில் கொண்டு, அது குறித்து பேச வேண்டும். இதனால், உங்களது உறவு அதள பாதாளத்தில் விழாமல் தவிர்க்கலாம். 

தனிப்பட்ட வளர்ச்சி:

முன்பு, கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன் என்ற நிலை இருந்தது. இப்போது, இருவரும் அவரவர்களேயே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, உங்கள் வாழ்க்கையில், காதல் அல்லது திருமண வாழ்க்கைகு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு உங்களுக்கும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் உறவும் மென்மேலும் வளரும். 

மேலும் படிக்க | ‘இந்த’ 5 இடங்களில் கம்முன்னு இருந்தா..வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News