முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் விமானத்தில் தன்னுடன் பயணித்த பயணி செல்ஃபி கேட்டு தொந்தரவு செய்ததால் அவரது முகத்திலேயே குத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, அனன்யா பான்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லைகர்'. தற்போது லைகர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 'லைகர்' படத்தின் படக்குழுவினர் அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொன்டா அது பற்றி பெருமையுடன் பதிவிட்டிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.