கொசுக்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ரசாயனம் மருந்து அல்லது கொசு விரட்டி சுருள்கள்,க்ரீம்கள் என எதுவும் தேவையில்லை. இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டலாம்.
கொசுக்களை விரட்ட, பலர் பொதுவாக சுருள்கள், வேப்பரைசர்கள், கிரீம்கள் மற்றும் ரோல்-ஆன்கள் போன்ற பல வகையான கொசு விரட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள ரசாயனங்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் நிலையில், கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு பக்க விளைவுகளை தரும் செயற்கை வழிகளை விட, இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவது சிறந்தது.
கொசுக் கடியிலிருந்து தப்ப, பல கிரீம்கள் மற்றும் மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்திலும் நம் உடலுக்கும் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.
கொசுக்கள் கடிப்பதன் மூலம் உங்களைத் தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல், பல நோய்களுக்கும் காரணமாகின்றன. கொசுக்களை விரட்டினால் மட்டும் போதாது, கொசு கடிக்காமல் இருப்பதும் முக்கியம்
கொசுக்களை விரட்ட வந்திருக்கும் ஸ்மார்ட் கொசு விரட்டியின் விலை 52 ஆயிரம் ரூபாயாம்.