அந்தேரி ரயில் நிலையம் அருகே அந்தேரி கிழக்கு பகுதியையும் மேற்கு பகுதியையும் இணைக்கும் கோகலே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 2 பேர் காயமடைந்தனர்.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது மும்பையில் மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரெயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.