World Blood Donor Day: இரத்த தானம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நல்லது.
ABO ரத்தக் குழு முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ரத்த தானத்தின் செய்வது அவசியம். அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 14-ம் தேதி 'உலக ரத்த தான தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் 10 லட்சம் பேருக்கு அவசர நிலையின் போது ரத்தம் கிடைக்காமல், உயிரிழந்துள்ளனர்.
ஆண்டுதோறும் 25 கோடி பேர் அவசர நிலையை சந்திக்கின்றனர். இவர்கள் காப்பற்றப்பட வேண்டும் எனில் ரத்ததானம் அவசியம்.
உலகளவில் ஆண்டுக்கு 11.2 கோடி பேர் மட்டும் ரத்த தானம் செய்கின்றனர். இதில் சரிபாதி, அதிக வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக வருமானம் உடைய நாடுகளில், 1000 பேரில் 32 பேர் ரத்ததானம் செய்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.