கத்துவா, உனா சம்பவம்: நீதி கிடைக்கும் உறுதி அளித்த பிரதமர்!!

கத்துவா மற்றும் உனா சம்பவத்துக்கு காரணமானவர்கள் நிச்சியமாக தண்டனை வழங்கப்படும் என நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 14, 2018, 09:29 AM IST
கத்துவா, உனா சம்பவம்: நீதி கிடைக்கும் உறுதி அளித்த பிரதமர்!! title=

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைதாகியுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல உத்தரப்பிரதேசம் உனா நகரில் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணை பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தந்தை புகார் தெரிவிக்க சென்ற போது திடிரென மரணம் அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாகியும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் உத்தர பிரதேச மாநில அரசு எடுக்கவில்லை.

இந்த இரண்டு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுக்குறித்து இதுவரை நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை என, மோடியின் மவுனத்தை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

 

 

இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை நேற்று டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் கத்துவா, உனா சம்பவம் குறித்து பேசினார். அவர் கூறியது,

 

 

கடந்த சில தினங்களாக நாட்டில் பேசப்பட்டு சம்பவத்திற்க்கு வெட்க பட வேண்டும். பன்பட்ட நாகரிகமான சமுதாயத்தை நமது நாட்டில், இது போன்ற சம்பவங்கள் வெட்ககேடானவை. குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது.

 

 

என் மகள்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்பதை நான் அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன் என ஜம்மு ஜாஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், உத்தரப்பிரதேசம் உனா நகர் சம்பவத்திற்கும் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News