சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்... 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • May 20, 2024, 09:20 PM IST

சில நாட்களுக்கு முன்பு, பெண் போலீசாரை அவமதித்து பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யபட்டார். பிரபல யூடியூபரான இவர், பெண் போலீஸார் குறித்து இழிவாக பேசியிருந்த வீடியோக்களும் நேர்காணல்களும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவரது அலுவலகம் மற்றும் வீட்டை சோதனை போட்டதில், சில போதை பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை காரணமாகத்தான அவர் இன்று கோர்டில் ஆஜர்படுதப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News