குட்காவுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.