தளபதி விஜய்-ன் ‘தெறி’ ரீ-மேக்கில் கேத்ரின் தெரேசா!

தெலுங்கு ரீமேக்கில், எமி ஜாக்சன் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் கேத்ரின் தெரேசா.

Last Updated : Apr 12, 2018, 05:26 PM IST
தளபதி விஜய்-ன் ‘தெறி’ ரீ-மேக்கில் கேத்ரின் தெரேசா!  title=

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெறி. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகளை கொண்டது இப்படம். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்தார். வருகிற 14-ம் தேதி வந்தால் இந்தப் படம் வெளியாகி சுமார் இரண்டு வருடம் ஆகிறது.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பிடித்தது மட்டுமின்றி நல்ல வசூலையும் அள்ளியது. இதை தொடர்ந்து, இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இப்படத்தை இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளார். இந்த தேறி தெலுங்கு  ரீ-மேக்-ல் விஜய் கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கவுள்ளதாகவும், எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் தெரேசா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமந்தா கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Trending News