நைஜீரியா தற்கொலை படை தாக்குதலில் 22 பேர் பலி!

வடக்கு நைஜீரியாவில் கானோவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Last Updated : Feb 17, 2018, 03:34 PM IST
நைஜீரியா தற்கொலை படை தாக்குதலில் 22 பேர் பலி! title=

கானோ: வடக்கு நைஜீரியாவில் கானோவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் இத்தாக்குத்தில் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைப்படை  நடத்திய இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உயிரிழந்தவர்களில் 18 பேர் பொதுமக்கள் எனவும் ஒருவர் அந்நாட்டு ராணுவத்தை சேர்ந்தவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படுகாயங்களுடன் மீட்கப் பட்டவர்களில் 20 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரிய இராணுவமானது இஸ்லாமியவாத பயங்கரவாத குழுவான போக்கோ ஹராமிற்கு எதிராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆண்டு முதல் இதுவரை 20000 மக்கள் இத்தகு தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேலையில் சுமார் 2.6 மில்லியன் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது!

Trending News