பாகிஸ்தானில் ரயில் மோதி 6 பேர் பலி, 150 பேர் காயம்

Last Updated : Sep 15, 2016, 01:35 PM IST
பாகிஸ்தானில் ரயில் மோதி 6 பேர் பலி, 150 பேர் காயம்

பாகிஸ்தானில் ரயில் விபத்தில் 6 பேர் பலி மற்றும் 150 பேர் காயம் அடைந்து உள்ளனர். 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முல்டான் பகுதியில் தண்டவளாத்தில் சென்றவர் நபர் மீது சரக்கு ரெயில் மோதி உள்ளது. இதனால் சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த நபரின் சடலத்தை மீட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த பயணிகளின் ரயில் அவாம் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் மீது மோதியது. மோதிய வேகத்தில் அவாம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்ஜின் மற்றும் 4 பெட்டிகள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர். 

அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ரெயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

More Stories

Trending News