காபூல்: உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஆப்கானிஸ்தானில் சுமார் 7,200 பேர் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது. அன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் பிரச்சினையை சமாளிக்க இன்னும் விரிவான பொது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு உலக சுகாதார அமைப்பு விடுத்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சகம் நாட்டில் எச்.ஐ.வி பாதிப்புகள் 2,883 பேருக்கு மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு பொது சுகாதாரத் துணை அமைச்சர் பிடா முகமது பைக்கன் கூறுகையில், 'எங்கள் தரவுகளின்படி, நாட்டில் 2,883 பேருக்கு எச்.ஐ.வி நோய் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் 7,200 பேருக்கு எச்.ஐ.வி. என்பது வெறும் மதிப்பீட்டின் அடிப்படையில் ஆகும்ன் எனக் கூறினார்.
HIV வைரஸ் பரவும் காரணங்கள் குறித்து பாக்கன் கூறுகையில், "பொது சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு 183 எச்.ஐ.வி நோயாளிகளை பதிவு செய்துள்ளது. அது இந்த ஆண்டு எண்ணிக்கை 150 ஆக குறைந்துள்ளது. ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய, நாம் ஒரு முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட முகமது இட்ரிஸ் என்பவர் டோலோ நியூஸிடம், "எங்களுக்கு வந்துள்ள நோயைகளை குறித்து நாங்கள் வெளியே சொல்ல முடியாது. அதனால் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு எச்.ஐ.வி நோயாளியான உமர், "நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று, நாங்கள் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று மருத்துவர்களிடம் சொன்னால், அவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்கள்" என்று வருத்தத்துடன் கூறினார்.