ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 6ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மகளிர் பள்ளிகள் தாலிபன்களால் மூடப்பட்டன.பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மூத்தவர்களும், உள்ளூர் கல்வி அதிகாரிகளும் சேர்ந்து எடுத்த முடிவிற்கு பிறகு அப்பள்ளிகள் திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அப்பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பக்தியா மாகாணத்தில் மூடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சமீபத்தில் பேரணியை நடத்தி போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த போராட்டம் உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | Netflix நிறுவனத்தை எச்சரிக்கும் வளைகுடா நாடுகள்... காரணம் என்ன!
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள், பெண்கள் 6ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்பதற்கு தடை விதித்ததாக கூறப்பட்டது. இதனால், மகளிர் மேல்நிலைப்பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்ததாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த பிரச்சனையை கவனத்தில் எடுத்து தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமை மற்றும் கல்வி சார்ந்த ஆர்வலர்கள் பலர் உலகத் தலைவர்களிடம் கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டிருந்தனர்.
தங்கள் வளர்ச்சி தடைப்பட்டு ஓராண்டு ஆகிவட்டதாவும், தங்களின் கல்வி கனவுகளை சமரசம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஆப்கனின் சிறுமிகள் மற்றும் பெண்கள் நினைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால், அவர்களின் நோக்கங்களும் மற்றும் நம்பிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகத் தலைவர்கள், நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியோர் இணைந்து ஆப்கானிஸ்தான் சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 6ஆம் வகுப்பிற்கு மேல் மாணவிகள் கல்வி கற்க கூடாது என்ற திட்டத்தை எதிர்த்து விரைவாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | மன்னர் சார்லஸின் வீங்கிய விரல்கள்... மருத்துவர்கள் கூறுவது என்ன..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ