ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன், தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அதிக இடங்களை கைப்பற்றி அந்தோணி அல்பேனீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்வானார்.
கேன்பரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை அந்தோணி அல்பேனீஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமர் ஆவார். அவருடன் 4 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற பின் உரையாற்றிய அவர், ஆஸ்திரேலியாவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் வல்லரசாக மாற்றுவது, தேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தை நிறுவுவது, நாட்டின் சுகாதார அமைப்பை உலகத்தரத்தில் வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
மேலும் படிக்க | மற்றொரு பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விபத்தில் மரணம்!
அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பணியைத் இணைந்து தொடங்குவோம் எனவும் அந்தோணி அல்பேனீஸ் தனது வெற்றி உரையில் குறிப்பிட்டார். 59 வயதான அந்தோணி அல்பேனீஸ், 1996-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்ற கையுடன், டோக்கியோவில் நடைபெற உள்ள குவாட்(QUAD) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் ஜப்பான் செல்கிறார். க்வாட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பாகும். இந்த அமைப்பின் 2-வது உச்சி மாநாடு டோக்கியோவில் நடைபெறும் நிலையில் 4 நாட்டுத் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க | QUAD நாடுகளின் மாணவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த நற்செய்தி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR