தென்சீனா கடல் அருகே அமெரிக்க போர்க்கப்பல்- சீனா கண்டனம்

Last Updated : Jul 3, 2017, 11:35 AM IST
தென்சீனா கடல் அருகே அமெரிக்க போர்க்கப்பல்- சீனா கண்டனம் title=

தென் சீனா கடல் பகுதி முக்கிய வர்த்தக மையமாக உள்ள நிலையில் அங்கு சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று டிரைடன் தீவை நெருங்கும் வகையில் தீவில் இருந்து 12 மைல்கள் தொலைவில் நேற்று பயணம் செய்தது.

கடல்வழி பகுதிகளில் சுதந்திரமுடன் அனைத்து கப்பல்களும் சென்று வருவதனை எடுத்து காட்டும் வகையில் இந்நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தென் சீனா கடலில் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்கு அருகே அமெரிக்காவின் போர்க்கப்பல் பயணம் செய்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. 

Trending News