ஒன்றரை மாதத்தில் ஒல்லி பெல்லி வேணுமா... 2-2-2 முறையில் உடல் எடையை சட்டுனு குறைக்கலாம்!

Health Tips: உடல் எடையை விரைவாக, அதாவது 6 வாரங்களுக்கு சட்டுனு குறைக்க இந்த 2-2-2 வியூகம் கைக்கொடுக்கும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 25, 2024, 06:12 PM IST
  • 2-2-2 வியூகம் இரண்டு வகைப்படும்.
  • 2-2-2 உடல் எடை குறைப்பு என்பது 6 வார காலகட்டத்தில் செய்யக்கூடியதாகும்.
  • இதில் உணவுமுறை கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் அடங்கும்.
ஒன்றரை மாதத்தில் ஒல்லி பெல்லி வேணுமா... 2-2-2 முறையில் உடல் எடையை சட்டுனு குறைக்கலாம்! title=

Health Tips For Weight Loss: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உணவுமுறையில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மூலம் ஒருவர் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கு எப்போதுமே தொடர்ச்சியான கட்டுப்பாடு தேவைப்படுகிறது. குறுக்கு வழியில் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பது உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஊக்கத்துடனும், நம்பிக்கை உடனும் தொடர்ந்து செயல்படுவதற்கு பல்வேரு வியூகங்களும், வழிமுறைகளும் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் 2-2-2 என்ற வியூகத்தின் அடிப்படையில் நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்கலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்படியென்றால் என்ன என கேட்கிறீர்களா... அதைதான் இங்கு விளக்க உள்ளோம்.

2-2-2 வியூகத்தின் அடிப்படையில் நீங்கள் சட்டுனு உடல் எடையை குறைக்கலாம். இந்த உடல் எடை குறைக்கும் வழிமுறையில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் ஆகியவையும் அடங்கும். இவை தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையையும் குறைக்கும் என்கின்றனர். 2-2-2 உடல் எடை குறைக்கும் வியூகத்திலேயே இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க | கர்ப்பிணிப் பெண்கள் இந்த யோகாசனத்தைச் செய்தால் உங்கள் பிரசவம் சுகப்பிரசவமாகும்!!

முதல் வகை

2-2-2  உடல் எடை குறைப்பு என்பது 6 வார காலகட்டத்தில் செய்யக்கூடியதாகும். முதல் இரண்டு வாரங்களில் நீங்கள் கொழுப்புகள் அடங்கி உணவுகள், கார்ப்போஹைரேட்கள் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து மாற்று உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களில் உணவே இல்லாத வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். கடைசி இரண்டு வாரங்களில் உடல்எடை உடற்பயிற்சிகளான புஷ்-அப்ஸ், பிளாக்ஸ் போன்றவை அல்லது குறுப்பிட்ட கால இடைவெளியில் அதிதீவிரமான உடற்பயிற்சியையோ மேற்கொள்ளலாம்.

இரண்டாவது வகை

இந்த இரண்டாவது வகையில் மொத்தம் நான்கு வழிமுறைகள் இருக்கின்றன. சில உணவுமுறை கட்டுப்பாட்டுடனும், உடற்பயிற்சிகளும் இதில் அடங்கும். 

தினமும் 2 காய்கறிகள்: தினமும் இரண்டு காய்கறிகள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும். அதிலும் பச்சிலை காய்கறிகள், புரோக்கோலி, கேரட் போன்ற நார்ச்சத்து வைட்டமிண்கள், கனிமங்கள் நிறைந்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். இது உங்களின் செரிமானத்திற்கு உதவும், அதே நேரத்தில் கடுமையான நோய்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.

தினமும் 2 பழங்கள்: அதேபோல் தினமும் அத்திவாசிய கனிமங்கள், வைட்டமிண்களை அளிக்கும் இரண்டு பழங்களை சாப்பிட வேண்டும். அதில் ஆண்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்திருக்க வேண்டும். அந்த வகையில், பெரீஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். செரிமானம் சீராகும். உடல் எடை குறையும். 

தினமும் 2 முறை நடைபயிற்சி: நடைப்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். காலையிலும் மாலையிலும் 2 வேளையும் தினமும் நடந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடை குறைப்புக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் மட்டுமின்றி மனநிலையை சீராக வைக்கவும் இது உதவும். இதனால் இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்கும் வாய்ப்பும் அதிகம். 

தினமும் 2 லிட்டர் தண்ணீர்: அதேபோல் தினமும் 2 லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்தை சீராக வைக்கும். உடலும் ஆற்றலுடன் செயல்படும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | டிபன் ஃபுல்லா காலியாகிவிடும்... குழந்தைகளுக்கான சில சுவையான ஆரோக்கியமான ரெஸிபிகள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News