ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியின் மத்திய பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. நொர்சியா மாகாணத்தில் உள்ள அம்பிரியான் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் ரோம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை உலுக்கியது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் ஓட்டம் பிடித்தனர். வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பாலங்கள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கின. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 3 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 17 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுவரையில் 73 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு இத்தாலியின் மத்திய பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதும், அதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் நினைவு கூறத்தக்கதாகும்.