தகவல் திருட்டுக்கு பிறகும் பேஸ்புக்கின் வருவாய் உயர்வு

தகவல் திருட்டு சம்பவத்தால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Apr 26, 2018, 05:05 PM IST
தகவல் திருட்டுக்கு பிறகும் பேஸ்புக்கின் வருவாய் உயர்வு
Zee Media

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடி இருக்கிறது. இதற்கு பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் தகவல்களை வழங்கிய உள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிந்துதான் தகவல்களை திருடப்பட்டது என கூறப்பட்ட நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க்சூகர் பெர்க்கும் ஒப்புக்கொண்டார். ஆனால் இச்சம்பவம் உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவல் திருட்டு விவகாரம்: பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சி

இதனையடுத்து, இதுபோன்ற தவறுகள் இனிமேல், நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார் மார்க்சூகர் பெர்க்.

இந்த குற்றச்சாற்று மூலம் ஒரே நாளில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்தது. அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம்?

ஆனால், அதன் காலாண்டு வருவாய் தற்போது அதிகரித்து உள்ளது. 49 சதவீதம் அதிகரித்து 12 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் நிகர இலாபம் 65 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.