இர்மா சூறாவளி: கரீபியன் தீவில் இதுவரை 15 பேர் பலி

Last Updated : Sep 8, 2017, 10:49 AM IST
இர்மா சூறாவளி: கரீபியன் தீவில் இதுவரை 15 பேர் பலி title=

கரீபியன் தீவுகளில் ஏற்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த இர்மா சூறாவளியால் 12 பேர் பலி. மேலும் செயிண்ட் மார்டின் தீவு மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மிக சக்திவாய்ந்த மணிக்கு சுமார் 200 கி.மீ. வேகத்தில் வீசும் சூறாவளி அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இந்த இர்மா சூறாவளியால் கரீபியன் தீவில் உள்ள போர்ட்டோரிகா, அன்டிகுவா, பர்புடா, செயின்ட் மார்ட்டின் தீவு, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு போன்றவை கிட்டத்தட்ட 95 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் இர்மா சூறாவளி சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கரீபியன் தீவுகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இயல்புநிலை திரும்ப குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கரீபியன் தீவுகளில் இரண்டு செல் டவர் சேதமடைந்த்துள்ளது. இதனால் தொடர்பு கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பார்புடா பகுதியில் குடியிருப்பாளர்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாத கடுமையான சூழ்நிலையில் வாழ்கின்றனர்.

இர்மா சூறாவளிக்கு இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

அதேவேளையில், புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கரோலினாஸ் மற்றும் ஜோர்ஜியா பகுதிகளில் அவசரநிலை அறிவித்திருக்கின்றன.

Trending News