இந்திய மற்றும் சீன குடிமக்கள் பிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை

இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2019, 01:41 PM IST
இந்திய மற்றும் சீன குடிமக்கள் பிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை title=

புதுடெல்லி: இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்து தீவிர வலதுசாரி அரசியல்வாதியான போல்சனாரோ, சில வளர்ந்த நாடுகளில் இருந்து பிரேசில் வர விசா தேவையில்லை என்ற கொள்கையை உருவாக்கி, அதை நடைமுறைபடுத்தினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் பிரேசிலுக்கு வர விசா தேவைகளை முடிவுக்கு கொண்டுவந்தது.

இதுகுறித்து பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ நேற்று (வியாழக்கிழமை) தென் அமெரிக்க நாடு, சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் அல்லது வணிகர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு விசாவைப் பெறுவதற்கான தேவையை கைவிடுவதாகக் கூறினார். 

இனி இந்தியாவில் இருந்து பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா செல்லவோ அல்லது தொழில் தொடர்பாக வர்த்தகம் செய்யவோ செல்ல நேரிட்டால் விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News