டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்தார் இளவரசர் பிலிப்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் (97 வயது) கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியமைக்காக தனது டிரைவிங் லைசென்சை சரண்டர் செய்துள்ளார்.

Updated: Feb 10, 2019, 08:54 AM IST
டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்தார் இளவரசர் பிலிப்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் (97 வயது) கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியமைக்காக தனது டிரைவிங் லைசென்சை சரண்டர் செய்துள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. மேலும் இந்த விபத்தில் அவரது தோழியும் காயம் அடைந்தார். 

இந்நிலையில், இளவரசர் பிலிப் நேற்று தனது டிரைவிங் லைசென்சை காவல் நிலையத்தில் திருப்பி அளித்துள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது.