இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359ஆக உயர்வு!!
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 300 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், உலகையே உலுக்கியுள்ளது, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நிகழாதவண்ணம் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று காலை, கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து உடனே, வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்க செய்தனர். மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது.
இலங்கையை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை ராணுவ அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டினரின் 17 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த 359 பேரில் 39 பேர் வெளிநாட்டினர். இலங்கையில் இன்னும் ஓரிருநாளில் அமைதி திரும்பும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sri Lanka's Def Min, Ruwan Wijewardene on explosion near Savoy Cinema in Colombo today: Special Task Force detected a suspicious motorbike&they had gone up to it. They had tried to open the seat but it had got stuck. They decided to have a controlled blast. So, it's not a bomb. pic.twitter.com/HLafHJVJni
— ANI (@ANI) April 24, 2019