IS பயங்கரவாதக் குழுத் தலைவர் அபுபக்கர் சகோதரி துருக்கி அரசால் கைது!

சிரியாவில் இறந்த IS பயங்கரவாதக் குழுத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அரசு கைது செய்துள்ளது..!

Last Updated : Nov 5, 2019, 10:49 AM IST
IS பயங்கரவாதக் குழுத் தலைவர் அபுபக்கர் சகோதரி துருக்கி அரசால் கைது! title=

சிரியாவில் இறந்த IS பயங்கரவாதக் குழுத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அரசு கைது செய்துள்ளது..!

இறந்த IS அமைப்பின் இஸ்லாமிய அரசுத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் சகோதரியை துருக்கி வடக்கு சிரிய நகரமான ஆசாஸில் திங்கள்கிழமை கைது செய்துள்ளதாக துருக்கியின் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். மேலும், அவரது கணவர் மற்றும் மருமகளையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தேடப்படும் குற்றவாளியான IS அமைப்பின் இஸ்லாமிய அரசுத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, அமெரிக்க படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், இவருடன் தொடர்புடைய நபர்களை அரசு தொடர்ந்து தேடி வருகிறது. 

இந்நிலையில், 65 வயதுடைய பாக்தாதியின் மூத்த சகோதரியான ராஸ்மியா, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்த ராஸ்மியாவை நேற்று மாலை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IS பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியா தொடர்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்து விசாரணை நடத்துவதன் மூலம், உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Trending News