வட கொரியாவுடன் வர்த்தகம் செய்வதை சீனா நாடு நிறுத்த வேண்டும் என ஐநா-வின் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனையை மீண்டும் மேற்கொண்டது. வட கொரியாவின் இந்தச் செயலுக்கு, அமெரிக்கா உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து, ஐநா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, 'வட கொரியாவின் ஏவுகணைச் சோதனை, ராணுவ விரிவாக்கத்துக்கான செயல். வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதுகுறித்த திட்டம் இன்னும் நடைமுறையில்தான் உள்ளது.
வட கொரியாவுடன் ஏதேனும் வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பது, ஐநா-வின் பாதுகாப்புத் தீர்மானத்தை மீறுவதாகும். அதில், சில நாடுகள் அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்வதற்கு விரும்புகின்றன. ஆனால், அது நடக்காது. வட கொரியா, தனக்கான 90 சதவிகித வணிகத்தை சீனாவுடன் மேற்கொள்கிறது. சீனா அதை நிறுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.