பிரான்ஸின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலது சாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று ஓட்டுபதிவுக்காக பிரான்சில் முக்கிய இடங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரெஞ்ச் காலனி நாடுகளிலும், வெளி நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங்களிலும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து அங்கு ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
இன்று நடைபெறுவது முதற்கட்ட வாக்குபதிவாகும். ஓட்டுபதிவு முடிந்ததும் மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். அதில் பதிவானதில் 50 சதவீதம் வாக்குகளை பெறுபவர் அதிபர் ஆவார்.
அதே நேரத்தில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வருகிற மே 7-ந் தேதி 2-வது கட்டமாக வாக்குபதிவு நடைபெறும். அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற 2 பேர் மட்டும் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள்.