)
Weight Loss Tips: இந்த நவீன உலகில் மக்களின் உணவுமுறையும் வாழ்க்கை முறையும் வெகுவாக மாறி வருகின்றன. இவை நமது உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகியவை ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் வரும் முக்கிய பிரச்சனையாக உள்ளன.
உடல் பருமன் என்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. தொப்பை கொழுப்பு ஒருவரது தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், இன்னும் பல நோய்களையும் ஏற்படுத்துகின்றது. தொப்பை பகுதியில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக இருக்கின்றது. தொப்பை கொழுப்பை குறத்து உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் நமக்கு சரியான முடிவுகளை அளிக்கின்றன என கூற முடியாது.
சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். உடல் பருமனை சரி செய்ய இது ஒரு அற்புதமான வீட்டு வைத்தியமாகும். இந்த செய்முறையை சரியான முறையில் பின்பற்றினால் மட்டுமே அதன் முழு பலனைப் அடைய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பாலுடன் இலவங்கப்பட்டை சேர்த்து குடிப்பதால் தொப்பை கொழுப்பை குறைத்து, வேகமாக உடல் எடையை குறைக்கலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை எப்படி உட்கொள்வது? இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
Cinnamon and Milk For Weight Loss
பலவீனமான குழந்தைகளுக்கு பெரும்பாலும் பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் பால் குடிப்பது எடை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் எடையை அதிகரிக்கும் பால், இலவங்கப்பட்டையுடன் சேரும்போது, எடை இழப்புக்கு ஒரு சிறந்த தீர்வாக மாறுகிறது. தினமும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் இலவங்கப்பட்டை பொடியைக் கலந்து குடித்தால், அது எடை இழப்பில் பெரிதும் உதவும்.
இலவங்கப்பட்டை பால் செய்வது எப்படி?
இந்த பானத்தை செய்ய, 1 கிளாஸ் பால் மற்றும் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் எடுத்துக்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தூளை பாலுடன் கலந்து, சூடாக்கவும். பால் நன்றாக சூடானவுடன், அதை குளிர்வித்து உட்கொள்ளலாம். இது உங்கள் எடை இழப்பு முயற்சியில் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
இலவங்கப்பட்டை பாலின் பிற நன்மைகள் என்ன?
- மன அழுத்தம் குறையும்.
- உறக்கம் மேம்படும்.
- இலவங்கப்பட்டையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
- அவை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த பால் உடலில் உள்ள வீக்கத்தை அகற்றவும் உதவுகின்றது.
- இலவங்கப்படை பால் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் பெரிதும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ