அமெரிக்காவில் கடந்த 6 ஆம் தேதி இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காணாமல் போயினர். அவர்களில் பெண் ஒருவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 6-ந் தேதி போர்ட்லான்டில் இருந்து சான் ஜோஸ்-க்கு காரில் சென்ற இந்திய குடும்பம்பத்தினர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களின் பெயர்கள் சந்தீப்(42), அவரது மனைவி சௌமியா(38), மகன் சித்தார்த்(12), மற்றும் மகள் சாக்சி(9) என்றும் அவர்கள் இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 6-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இந்திய குடும்பத்தார் பயணித்த ஹோன்டா பைலட் வாகனம் போன்ற வாகம் ஒன்று கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினரால் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கார் அடித்துச்செல்லப்பட்ட கடற்கரையில் இருந்து 7 மைல்கள் வடக்கே பெண்ணின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் விசாரணையில், மீட்கப்பட்ட பெண்ணின் உடல் காணாமல் போன சவுமியாவின் உடல் என்று உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளன.
மேலும், சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன.
சந்தீப் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வளர்ந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.