ஜியோ-க்கு போட்டியாக BSNL-ன் அதிரடி சலுகை! விவரம் உள்ளே!

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

Last Updated : Apr 7, 2018, 01:54 PM IST
ஜியோ-க்கு போட்டியாக BSNL-ன் அதிரடி சலுகை! விவரம் உள்ளே! title=

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

ஐபிஎல் சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் ஜியோ நிறுவனம், ஐபிஎல் தொடரைக் கொண்டு சில ரீசார்ஜ் திட்டங்களை  அறிவித்துள்ளது. அதில், ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 51 நாட்கள் செயல்படும் 102 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ. 248 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 51 நாட்கள் செயல்படும் 153 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் ரீசார்ஜ் இன்று முதல் தொடங்கி வரும் ஏப்ரல் 30 வரை செயல்பாட்டில் இருக்கும்.

Trending News