புதுடில்லி: எச்சரிக்கை!! உங்கள் மொபைலில் உள்ள QR Code-ன் மூலமாகவும் மோசடிகள் நடக்கக்கூடும். இந்த நுட்பத்தின் மூலம் ஹேக்கர்கள் (Hackers) இப்போது மக்களின் கணக்குகளில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எந்த மோசடியும் ஏற்படாதபடி QR Code-ஐ மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
QR Code என்றால் என்ன?
ஒரு QR Code (விரைவு மறுமொழி குறியீடு) சில டிஜிட்டல் தகவல்களைக் குறிக்கும் பல கருப்பு சதுரங்கள் மற்றும் புள்ளிகளைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, அந்த தகவலை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய டிஜிட்டல் மொழியாக அந்த குறியீட்டை மாற்றுகிறது. கொரோனா காலத்தில், மக்கள் மொபைல் மூலம் பணம் செலுத்த QR Code-ஐப் பயன்படுத்துகின்றனர். இதனால் தனி மனித இடைவெளிக்கான விதிகளும் பின்பற்றப்படுகின்றன.
QR Code மோசடி எப்படி நடக்கிறது?
ஒரு பொருளை விற்க இணையதளத்தில் ஆன்லைனில் அது வெளியிடப்படும் போது இந்த மோசடி தொடங்குகிறது. மோசடி செய்பவர்கள் (Fraudsters), வாங்குபவர்களைப் போல, அதை டோக்கன் பணத்தை செலுத்த பகிர்ந்து கொள்கின்றனர். பின்னர் அவர்கள் அதிக தொகையுடன் ஒரு QR Code-ஐ உருவாக்கி அதை வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் வாங்கும் நபருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ALSO READ: Jio ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் வேகம் 1 Mbps ஆக குறைப்பு!
QR Code-ஐப் பகிர்ந்த பிறகு, மோசடிக்காரர்கள், பயனர்களை, APP-ல் உள்ள "Scan QR Code” ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லது புகைப்பட கேலரியில் (Photo Gallery) இருந்து QR Code-ஐத் தேர்ந்தெடுக்கும் படி கூறுகிறார்கள். புகைப்பட கேலரியில் இருந்து QR Code-ஐ ஸ்கேன் செய்த பிறகு, பயனர் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். UPI பின் உள்ளிடப்பட்டவுடனேயே, பயனரின் வங்கிக் கணக்கிலிருந்து அதிக பணம் கழிக்கப்படுகிறது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
காவல்துறையினரும் வங்கி அதிகாரிகளும் டெபிட் / கிரெடிட் கார்டு எண், அவற்றின் காலாவதி தேதி, பின், ஓடிபி போன்றவற்றை யாரிடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அறியப்படாத நபர்கள் அனுப்பும் QR Code-களையும் ஸ்கேன் செய்ய வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த மோசடிக்கு ஆளானால், நீங்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் இணைய குற்றச் சட்டத்தின் கீழ் இதைப் பற்றி புகார் செய்யலாம். கடைகளில் பணம் செலுத்துவதற்கு மட்டுமே QR Code-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எந்தவொரு நபரிடமிருந்தும் பணம் பெறவோ அல்லது அனுப்பவோ QR Code தேவையில்லை.
ALSO READ: e-Gopala App: கால்நடை வளர்ப்பு தொடர்பான அனைத்து தகவலும் ஒரு நிமிடத்தில்!!