1 ரூபாய்க்கு 24 கேரட் தங்கம் வாங்கலாம், BharatPe-வின் புதிய Digital Gold!!

BharatPe-வின் கூற்றுப்படி, வணிகர்கள் BharatPe செயலி மூலம் 99.5 சதவிகிதம் தூய்மை கொண்ட 24 காரட் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2020, 12:58 PM IST
  • வணிகர்கள் BharatPe செயலி மூலம் 24 காரட் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம்.
  • தீபாவளிக்குள் 6 கிலோ தங்கத்தை விற்பனை செய்வதை BharatPe இலக்காகக் கொண்டுள்ளது.
  • தங்கம் வாங்கும்போது ஜிஎஸ்டி உள்ளீட்டு கடனின் நன்மையும் கிடைக்கும்.
1 ரூபாய்க்கு 24 கேரட் தங்கம் வாங்கலாம், BharatPe-வின் புதிய Digital Gold!! title=

பண்டிகை காலத்தை சிறப்பானதாக்க, இந்தியாவின் மிகப்பெரிய வணிக கட்டணம் செலுத்தும் நிறுவனமான BharatPe தனது தளத்தில் டிஜிட்டல் கோல்ட் அதாவது டிஜிட்டல் தங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

BharatPe இந்த புதிய சேவையை சேஃப் கோல்டுடன் (Safe Gold) இணைந்து தொடங்கியுள்ளது. SafeGold என்பது ஒரு டிஜிட்டல் தளமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு 24 காரட் தங்கத்தை 24 மணி நேர குறைந்த டிக்கெட் அளவில் வாங்க, விற்க மற்றும் டெலிவரி செய்ய வழி வகுக்கிறது.

BharatPe-வின் கூற்றுப்படி, வணிகர்கள் BharatPe செயலி மூலம் 99.5 சதவிகிதம் தூய்மை கொண்ட 24 காரட் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். டிஜிட்டல் தங்கம் ரூபாய் மற்றும் கிராமுக்கு ஏற்ப தங்கத்தை வாங்கலாம் அல்லது விற்கலாம். சிறப்பு என்னவென்றால், தங்கத்தை இதில் 1 ரூபாய்க்கு கூட வாங்க முடியும். கட்டணம் செலுத்த BharatPe Balance அல்லது UPI-ஐ பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் BharatPe கட்டண செயல்முறையில் கிரெடிட் / டெபிட் கார்டையும் சேர்க்கவுள்ளது.

ALSO READ: சரியான நேரத்தில் EMI செலுத்தினால் வங்கி உங்களுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கும்!!

தீபாவளிக்குள் 6 கிலோ தங்கத்தை விற்க இலக்கு

தீபாவளிக்குள் 6 கிலோ தங்கத்தை விற்பனை செய்வதை BharatPe இலக்காகக் கொண்டுள்ளது. வணிகர்கள் உலக சந்தையுடன் இணைந்துள்ள தங்கத்தின் உண்மையான நிகழ் நேர விலைகளை பார்க்க முடியும். தங்கம் வாங்கும்போது ஜிஎஸ்டி உள்ளீட்டு கடனின் நன்மையும் கிடைக்கும். வணிகர்கள் ஃபிசிகல் தங்கத்தின் டெலிவரி ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். வணிகர்கள் டிஜிட்டல் தங்கத்தை நேரடியாக விற்பனை செய்து வரும் பணத்தை, BharatPe-வில் பதிவு செய்யப்பட்ட அகௌண்ட் அல்லது தங்கள் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.

காப்பீடு செய்யப்பட்ட லாக்கர்களில் தங்கம் இருக்கும்

தங்கம் வாங்குவது தொடர்பாக வணிகர்களின் நலன்களைப் பாதுகாக்க IDBI அறங்காவலர் சேவைகளை சேஃப்கோல்ட் நியமித்துள்ளது. வாங்கப்பட்ட தங்கம், சேஃப்கோல்டுடன், கூடுதல் செலவில்லாமல் 100% காப்பீடு செய்யப்பட்ட லாக்கர்களில் சேஃப் கோல்ட் உடன் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.

வெளியீட்டு நாளில் 200 கிராம் தங்கம் விற்கப்பட்டது

BharatPe-வின் படி, தளத்தில் டிஜிட்டல் தங்கத்தை அறிமுகப்படுத்தியதால், வணிகர்களுக்கு முழு அளவிலான நிதி தயாரிப்புகள் கிடைத்துள்ளன. BharatPe குழுமத் தலைவர் சுஹைல் சமீர், BharatPe தளத்தில் தங்கம் அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக வணிகர்களிடமிருந்து எங்களுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன என்று கூறினார். அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் 200 கிராம் தங்கத்தை விற்றுள்ளோம். இதில் இன்னும் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும்.

எதிர்காலத்தில் டிஜிட்டல் தங்கத்தை ஒரு முக்கிய அம்சமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். 2020-21 நிதியாண்டில் 30 கிலோ தங்கத்தை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ: உங்க வங்கி கணக்கில் 10 பைசா இல்லாட்டி கூட ஷாப்பிங் செயலாம்.. எப்படி?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News