FD-க்கான வட்டியை அதிகரித்த ஆக்சிஸ்! முழுமையான விவரம் இதோ!

ஆக்சிஸ் வங்கியானது FD தவணைகளுக்கு வட்டி விகிதங்களை 2.5% முதல் 5.75% வரை உயர்த்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 16, 2022, 07:09 PM IST
  • ஆக்சிஸ் வங்கி FD தவணைகளுக்கு வட்டி விகிதங்களை 2.5% முதல் 5.75% வரை செலுத்தும்.
  • இதன்மூலம் எல்லா காலங்களிலும் மூத்த நபர்கள் 0.50% கூடுதலாக வட்டியை பெறுவார்கள்.
  • ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு ஆக்சிஸ் வங்கியானது 5.75% வட்டி விகிதத்தை கொடுக்கிறது.
FD-க்கான வட்டியை அதிகரித்த ஆக்சிஸ்! முழுமையான விவரம் இதோ! title=

தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியானது ஃபிக்ஸட் டெபாசிட்டின் பல்வேறு தவணைகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.  இந்த புதிய அறிவிப்பினை ஆக்சிஸ் வங்கி அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது, இந்த புதிய விதியானது மே-12,2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்து இருந்தது.  ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை டெர்ம் டெபாசிட்டுகளை வழங்குகிறது.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உயர் வட்டி விகிதத்தின்படி, ஆக்சிஸ் வங்கியானது FD தவணைகளுக்கு வட்டி விகிதங்களை 2.5% முதல் 5.75% வரை செலுத்தும்.

மேலும் படிக்க | தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்!

இதன்மூலம் எல்லா காலங்களிலும் மூத்த நபர்கள் 0.50% கூடுதலாக வட்டியை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் இந்த வட்டி விகித உயர்வுப்படி, மூத்த நபர்கள் ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய டெபாசிட்டுகளுக்கு 2.50% முதல் 6.50% வரை கூடுதலான வட்டி விகிதங்களை பெறுவார்கள்.  வட்டி விகிதங்கள் ஒன்பது மாதங்களுக்கு உயர்த்தப்படுகின்றன, ஒன்பது மாதங்களில் முதல் ஒரு வருடம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆக்சிஸ் வங்கியானது வட்டி விகிதத்தை 4.75% ஆக உயர்த்தி இருக்கிறது.

ஒரு வருடம் முதல் பதினைந்து மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு ஆக்சிஸ் வங்கியானது 5,25% வட்டி விகிதத்தை கொடுக்கிறது.  வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டிற்கு 5.30% வட்டி விகிதத்தை தருகிறது.  அதேபோல இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை உள்ள டெபாசிட்டிற்கு வங்கியானது 5.60% வட்டி விகிதத்தை கொடுக்கிறது.  மேலும் ஐந்து ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை உள்ள ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு ஆக்சிஸ் வங்கியானது 5.75% வட்டி விகிதத்தை கொடுக்கிறது.

மேலும் படிக்க | Fixed Deposit Rules: FD தொடர்பான விதிகளை RBI மாற்றியுள்ளது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News