சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய ஓட்டுநர் உரிம விதிகளை அமலுக்கு கொண்டு வந்தது. ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் ஓட்டுநர் உரிம சோதனைக்காக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் எடுக்கலாம் எனவும் உரிமத் தகுதிக்கான சோதனைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க தனியார் பயிற்சி மையங்கள் அங்கீகரிக்கப்படும் எனவும் விதிகள் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு எத்தனை நாட்களில் புதுப்பிக்க வேண்டும், புதுப்பிப்பதற்கான கட்டணம் என்ன, அதற்கு என்ன ஆவணங்கள் தேவை போன்றவை தொடர்பான தகவல்களுடன், உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்கும் செயல்முறை என்ன ஆகியவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
DL என்னும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால வரம்பு
ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகும், அது 1 மாதம் செல்லுபடியாகும். அதாவது உங்கள் டிரைவிங் லைசன்ஸை புதுப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் கிடைக்கும். 30 நாட்களுக்குப் பிறகு புதுப்பித்தால் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு வருடத்திற்குள் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது புதிதாக உரிமம் பெறும்போது நீங்கள் பின்பற்றிய அதே செயல்முறையை மீண்டும் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
DL புதுப்பித்தல் கட்டணம்
உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியான 30 நாட்களுக்குள் புதுப்பித்தால், அதற்குக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். ஆனால், காலாவதியான தேதிக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தால், நீங்கள் 1500 ரூபாய் செலுத்த வேண்டும்.
எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்?
இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், உரிமம் பெறும் அனைவருக்கும் 40 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு அதனை புதுப்பிக்க வேண்டும். 40 வயதிற்குப் பிறகு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒவ்வொரு 5 வருடங்களுக்கு வழங்கப்படும். அதன் பின் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் RTO அலுவலகத்தால் வழங்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி ஓராண்டுகள் கடந்துவிட்டால், உரிமம் பெறும்போது நீங்கள் மேற்கொண்ட அதே செயல்முறையை மீண்டும் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1. முதலில் https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. பின்னர் 'Driving License' விருப்பத்திலிருந்து 'Services on Drivers License' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. இதற்குப் பிறகு நீங்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
5. படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, 'Next' என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலே கூறப்பட்ட செயல்முறையை முடித்த பிறகு, இறுதியாக நீங்கள் இதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு நீங்கள் ஒரு ரசீது கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த தேதியில், உங்கள் அசல் ஆவணங்களுடன் கட்டண ஒப்புகை சீட்டுடன் RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். உங்களின் உரிமம் காலாவதியாகி ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகியிருந்தால்,முதலில் உங்களின் ஓட்டுநர் உரிமத்திற்கு கற்றல் உரிமம் வழங்கப்படும். மேலும் ஓட்டுநர் உரிமத்தைப் பெற, நீங்கள் ஓட்டுநர் சோதனையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க - புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ