திரைப்படம், டிவி சீரியல் நடிகர்கள், பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!!!

திரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதற்காகளை  விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2020, 12:53 PM IST
  • கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களின் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
  • சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின் படி, ஷூட்டிங்குகளை தொடருவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரைப்படம், டிவி சீரியல் நடிகர்கள், பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!!! title=

புதுடெல்லி: திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான நடைமுறைகளை வெளியிடுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்த நெறிமுறைகள் அனைத்தும் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளன, என்றார்.

கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து வெளியிடப்பட்ட இந்த நடத்தை நெறிமுறைகளை பின்பற்றி திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

ALSO READ | தங்கத்தை கட்டியாக கடத்துவது பழைய ஸ்டைல்.... ஷீட்களாக கடத்துவது புது ஸ்டைல்...!!!

விதிமுறைகள் தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொண்ட ஜவடேகர், கேமராக்களுக்கு முன்னால் இருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என்றார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதன் மூலம், அந்த துறையில் வேலைவாய்ப்பும் உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களுக்கான படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

 

 

 

Trending News