கொரோனா தொற்றுநோயின் இந்த நெருக்கடியான நேரத்தில், தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் வசதியை அளித்துள்ளது. HDFC வங்கி அப்பல்லோ மருத்துவமனைகளுடன் (Apollo Hospitals) ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு Healthy Life Programme வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வங்கியின் வாடிக்கையாளர்கள் அப்போலா மருத்துவமனையின் மருத்துவர்களிடமிருந்து வாரத்தில் ஏழு நாட்களும், அவர்கள் விரும்பும் போதெல்லாம் 24 மணிநேரமும் சுகாதார ஆலோசனைகளைப் பெற முடியும்.
வங்கிக்கும் மருத்துவமனைக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், வங்கியின் வாடிக்கையாளர்கள், அவசரகாலத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதியும் பெற முடியும். டாக்டரின் ஆலோசனையையும் WhatsApp-ல் பெறலாம்.
ALSO READ: Policy Alert: மலிவான Insurance Policy-ஐ கண்டு ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் IRDAI
வாடிக்கையாளர்களுக்கு முதலில் ஒரு வருடம் வரை ஒரு அப்பல்லோ மெம்பர்ஷிப் (Apollo Membership) இலவசமாகக் கிடைக்கும். தேவைப்பட்டால் வங்கியின் வாடிக்கையாளர்கள் அப்பல்லோ 24 | 7 மெம்பர்ஷிப்பின் கீழ் தள்ளுபடியில் தங்கள் வீட்டிற்கே மருந்துகளையும் வரவழைக்கலாம். வங்கியின் வாடிக்கையாளர்கள் சுகாதார பரிசோதனையையும் (Health Checkup) பெறலாம்.
வாடிக்கையாளர்களின் தேவையை மனதில் கொண்டு, HDFC வங்கியும் (HDFC Bank) சிகிச்சைக்காக நிதி உதவியை வழங்குகிறது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரையிலான, முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்களை வழங்குகிறது.
வாடிக்கையாளருக்கு 10 வினாடிகளில் இந்த கடன் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் இந்த கடனை No Cost EMI-ஆகவும் மாற்றலாம்.
HDFC வங்கிக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்தின் போது, HDFC வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி, உலகில் நம் உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைக் காட்டிலும் விலைமதிப்பற்ற விஷயம் வேறெதுவும் இல்லை என்று கூறினார். ஆரோக்கியமான இந்தியா ஒரு வளமான இந்தியாவை நோக்கிய முதல் படியாகும். செங்கோட்டையில் இருந்து தேசிய டிஜிட்டல் சுகாதார பணியை பிரதமர் மோடி (PM Modi) அறிவித்ததாக அவர் கூறினார். அதை மனதில் வைத்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: Health Insurance-ன் வகைகளை இனி Color Coding மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR