Online Payment: யுபிஐ ஐடியில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? இப்படி திரும்ப பெறலாம்

கூகுள் பே மற்றும் பேடிஎம், போன் பே வழியாக தவறான யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்பிவிட்டீர்கள் என்றால், அதனை திரும்பப்பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2022, 10:54 AM IST
  • ஆன்லைன் பணப்பரிவர்த்தனை
  • தவறாக பணம் அனுப்பிவிட்டீர்கள்
  • திரும்பப்பெறுவதற்கான வழி
Online Payment: யுபிஐ ஐடியில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? இப்படி திரும்ப பெறலாம் title=

Wrong UPI Transactions: பரிவர்த்தனைகளுக்கு  UPI ஐடியை பயன்படுத்துவது மிகவும் பிரபலமாகிவிட்டது. அனைவரும் விரும்பி பயன்படுத்துவதற்கு மிக முக்கியமான காரணம், இதில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இலவசமாக பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஜூலை மாதத்தில் மட்டும் UPI உதவியுடன் 600 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். UPI பரிவர்த்தனைகள் இவ்வளவு பெரிய அளவில் செய்யப்படும்போது, ​​அவ்வப்போது பிழைக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் ஒரு புதிய நபருக்கு UPI செலுத்தும்போது, ​​​​சிறிய தவறு காரணமாக, பணம் தவறான கணக்கிற்கு மாற்றப்படும். இது உங்களுக்கு நடந்திருந்தால், அத்தகைய தருணங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

ஹெல்ப்லைன் எண்ணில் புகார்

நீங்கள் UPI உதவியுடன் தவறான கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்திருந்தால், பயப்பட தேவையில்லை. தவறான பரிவர்த்தனை நடந்தால், முதலில் பணப்பரிவர்த்தனையின் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும். அதன்பின்னர் ஹெல்ப்லைன் எண்ணிற்கு அழைத்து புகாரளிக்க வேண்டும். இந்தப் பரிவர்த்தனையைப் பற்றி உங்கள் வங்கிக்கும் தெரிவிக்கவும். கிளை மேலாளரை விரைவில் தொடர்பு கொள்ளவும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், UPI ஐடி இருந்தால் மட்டுமே இருப்பு பரிமாற்றம் நடக்கும். உங்கள் தவறு காரணமாக இல்லாத யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்பியிருந்தால் அது தானாகவே உங்கள் கணக்குக்கு திரும்பிவிடும். 

மேலும் படிக்க | சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாமல் க்ரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வழிகள்!

பணப்பரிவர்த்தனை ஆதாரம்

ஒருவேளை நீங்கள் செய்த தவறு காரணமாக வேறு ஒருவரின் கணக்குக்கு பணம் மாறியிருந்தால், அது தொடர்பான ஆதாரத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கியில் புகார் செய்யும்போது, பணப்பரிவர்த்தனை தொடர்பாக எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆதாரம் உள்ளிட்ட விவரங்களை மின்னஞ்சலில் சேர்க்கவும். ஒரே வங்கியில் உள்ள மற்றொரு கணக்கிற்கு பணம் சென்றிருந்தால், உங்கள் வங்கியே அந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்காக, பணம் பெற்றவரை தொடர்பு கொள்ளும். 

உதவும் வங்கி 

ஒரே வங்கியில் இருக்கும் இரு வாடிக்கையாளர்களுக்கு இடையே தவறான பணப் பரிவர்த்தனை ஏற்பட்டிருந்தால் பணம் பெற்றவரின் அனைத்து தகவல்களையும் உங்கள் வங்கி பகிர்ந்து கொள்ளும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கிளை, மொபைல் எண் மற்றும் பிற வகையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் பெறுநரின் கிளைக்குச் சென்று மேலாளரிடம் பேசி அவரை தொடர்பு கொள்ளலாம். இதேபோல் மற்ற வங்கிகளின் மேலாளர்களும் இதேபோன்ற உதவியை செய்ய முயற்சி எடுப்பார்கள்.

7 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம்

பெறுநர் பணத்தை மாற்றத் தயாராக இருந்தால், பணம் ஏழு வேலை நாட்களுக்குள் கணக்கில் திரும்பப் பெறப்படும். அவர் பணத்தைத் திருப்பித் தரத் தயாராக இல்லை என்றால், மேலும் சிக்கல் ஏற்படும். இந்த வழக்கில், சட்ட வழியையும் தேர்வு செய்யலாம். இருப்பினும், வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல், எந்த வங்கியும் அவரது கணக்கில் இருந்து பணத்தை மாற்ற முடியாது.

மேலும் படிக்க | Post Office: போஸ்ட் ஆஃபீஸில் 100 ரூபாய் முதலீடு .. ரூ.26 லட்சம் ரிட்டன்: சேமிப்புக்கு உத்திரவாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News